கரோனா தொற்று: பிற மாநிலங்கள் நிலவரம்
by DINகரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பிற மாநிலங்களில் இன்று (புதன்கிழமை) புதிதாக பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தரப் பிரதேசம்:
உத்தரப் பிரதேசத்தில் இன்று புதிதாக 269 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 6,991 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 182 பேர் பலியாகியுள்ளனர்.
ராஜஸ்தான்:
ராஜஸ்தானில் இன்று புதிதாக 280 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,816 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 173 ஆகவும் உயர்ந்துள்ளது. இன்றைய தேதியில் மொத்தம் 3,081 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஹரியாணா:
ஹரியாணாவில் இன்று புதிதாக 76 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,381 ஆக உயர்ந்துள்ளது.
மத்தியப் பிரதேசம்:
மத்தியப் பிரதேசத்தில் இன்று புதிதாக 237 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 8 பேர் பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 7,261 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 313 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மொத்தம் 3,927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
குஜராத்:
குஜராத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 376 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 23 பேர் இன்று பலியாகியுள்ளனர். இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 15,205 ஆகவும், மொத்தம் பலியானோரின் எண்ணிக்கை 938 ஆகவும் உயர்ந்துள்ளது.
மேற்கு வங்கம்:
மேற்கு வங்கத்தில் புதிதாக 183 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 4,192 ஆக உயர்ந்துள்ளது.
ஜம்மு காஷ்மீர்:
ஜம்மு காஷ்மீரில் புதிதாக 162 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இன்று 21 பேர் குணமடைந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அங்கு மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,921 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 26 பேர் பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 854 பேர் குணமடைந்துள்ளனர்.