முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் நாளை ஆலோசனை – மின்முரசு

கொரோனா நிலை, ஊரடங்கு ஆகியவை குறித்து தமிழக முதலமைச்சர் பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

சென்னை:

தமிழகத்தில் தற்போதைய நிலவரப்படி 18 ஆயிரத்து 545 பேர் கொரோனா வைரசால் பாதிப்படைந்து உள்ளனர். தலைநகர் சென்னையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிக அளவில் உள்ளது.

தமிழகத்தில் அமலில் உள்ள ஊரடங்கானது வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனினும் அதற்கு முன்பே ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வழியே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.

இதில், தமிழகத்தில் இதுவரை மேற்கொண்ட கொரோனா தடுப்பு பணிகள், ஊரடங்கு முடிவடையும் மே 31-ம் தேதிக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், ஊரடங்கு நீட்டிப்பு அல்லது தளர்வு ஆகியவை பற்றி ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.

Related Tags :

Source: Maalaimalar

https://secure.gravatar.com/avatar/c78300fab31b0f0459ea70f75dfa173e?s=100&d=mm&r=g

murugan

Post navigation

கொரோனாவின் கோரப்பிடியில் மகாராஷ்டிரா – பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்குகிறதுஅதிரும் பிரேசில் – கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தை தாண்டியது

Related Posts

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282224068951_Tamil_News_Amit-Shah-Speaks-To-Chief-Minister-Asks-For-Feedback-On_SECVPF.gif

மாநில முதல்-அமைச்சர்களுடன் அமித் ஷா பேச்சு: லாக்டவுன் குறித்து கருத்து கேட்பு

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282155430963_1_Nazriya005._L_styvpf.jpg

நடிகையின் குழந்தை பருவ புகைப்படத்திற்கு குவியம் லைக்ஸ்

murugan May 28, 2020 0 comment

https://www.minmurasu.com/wp-content/uploads/2020/05/202005282032595042_Tamil_News_Prakash-Raj-is-the-voice-of-nature_SECVPF.gif

இயற்கையின் குரலாக மாறும் பிரகாஷ் ராஜ்

murugan May 28, 2020 0 comment