http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2605_2020__548488795757294.jpg

சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்; தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம்; மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால்

டெல்லி: 10,12-ம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்கள் தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம் என மத்திய மனிதவளத்துறை அறிவித்துள்ளது. பொது முடக்கத்தால் சொந்த ஊர்களுக்கு சென்ற மாணவர்கள் தேர்வு எழுத வேறு ஊருக்கு செல்ல தேவையில்லை எனவும் கூறியுள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் நாடு முழுவதும் சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஜூன் 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை சிபிஎஸ்இ 10 மற்றும்12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என அறிவித்துள்ளனர்.

இந்த தேர்வுகள் அந்த பள்ளியே தேர்வு மையங்கள் அமைத்து நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 மற்றும்12ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் தற்போது இருக்கும் மாவட்டங்களிலேயே தேர்வு எழுதலாம் என மத்திய மனித வள அமைச்சகம் அறிவித்துள்ளது. ஊரடங்கு காரணமாக மாநிலம் விட்டு மாநிலம் மாறியிருந்தாலும் அங்கிருந்தபடியே தேர்வு எழுதலாம் என கூறப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவால் அனைவரும் தாங்கள் இருந்த இடங்களில் இருந்து சொந்த ஊருக்கோ, வேறு மாவட்டம் அல்லது மாநிலங்களுக்கோ சென்றுள்ளனர்.

நாடு முழுவதும் பொது போக்குவரத்திற்கு தடை விடுத்துள்ள நிலையில் மாணவர்கள் தேர்வு எழுத வர முடியாத சூழல் நிலவிய நிலையில் சிபிஎஸ்இ 10,12ம் வகுப்பு மணவர்கள், தற்போது இருக்கும் ஊரிலேயே பொதுத்தேர்வை எழுதி கொள்ளலாம் என மத்திய அரசு அறிந்துள்ளது மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது. பொது முடக்கத்தால் சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் தேர்வு எழுத வேறு ஊருக்கு செல்லத் தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.