பாடசாலை, பல்கலைக்கழக விண்ணப்பங்களை சமர்பிக்குமாறு கோரிக்கை
by Ajith, Manoshankar2019 மற்றும் 2020ம் ஆண்டின் பல்கலைக்கழக அனுமதிகளுக்கான இணையம் மூலமான விண்ணப்ப இறுதி திகதி ஜூன் 2 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இதனை அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்த விண்ணப்பங்களுக்கான இறுதித் திகதி ஏப்ரல் 9ஆக அறிவிக்கப்பட்டிருந்தது
எனினும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக அந்த திகதி பிற்போடப்பட்டது.
இதேவேளை அரச பாடசாலைகளில் 2021ம் ஆண்டுக்காக முதலாம் ஆண்டு மாணவர்களை சேர்த்துக்கொள்ளும் விண்ணங்கள் ஜூலை 15ம் திகதிக்கு முன்னர் பாடசாலைகளின் அதிபர்களுக்கு சமர்ப்பிக்கப்படவேண்டும் என்று கல்வி அமைச்சு கோரியுள்ளது.