யாழில் உணவகங்கள், விடுதிகளை மீள திறக்க அனுமதி! விடுக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கை

by

யாழ். குடாநாட்டில் உணவகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் மீள திறப்பதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியினை சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்களுக்கு சேவையாற்றுங்கள் என யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தின் உபதலைவர் ஆர்.ஜெயசேகரம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ். குடாநாட்டில் உணவகங்கள், விடுதிகள் மற்றும் திருமண மண்டபங்கள் மீள திறக்கப்பட்டு மக்களுக்கு சேவையாற்றுவதற்கு இன்றைய தினத்திலிருந்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த நிறுவனங்களின் உரிமையாளர்கள் சுகாதார நடைமுறையை பின்பற்றி சமூக இடைவெளி மற்றும் கிருமித் தொற்று நீக்கல் செயற்பாடுகளை செயற்படுத்தி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

கிடைக்கப்பெற்றுள்ள அனுமதியினை தவறாக செயற்படுத்தி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படாமல் இருக்க வேண்டியது தங்களுடைய பொறுப்பாகும் எனவும் அவர் தெரிவித்தார்

https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png

ஏனைய மாவட்டங்களில் உணவகங்கள் திறப்பதற்கு அனுமதி அளித்திருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் அதற்குரிய அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் யாழ்ப்பாணம் வணிகர் கழகத்தினர் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் யாழ். மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ஆகியோருடன் கலந்துரையாடி இன்று அதற்கான அனுமதி பெறப்பட்டுள்ளது.

சுகாதாரத் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும்.

குறித்த விடயங்கள் தொடர்பில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கூடிய கரிசனை செலுத்துவதன் மூலமே இதனை நடைமுறைப் படுத்தி மக்களுக்கு உரிய சேவையினை வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்