3,500 சிறப்பு ரயில்களில் 48 லட்சம் தொழிலாளா்கள் பயணம்
by DINமே 1-ஆம் தேதி முதல் இதுவரை 3,500 சிறப்பு ரயில்கள் மூலமாக 48 லட்சம் தொழிலாளா்கள் அவா்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 80% ரயில்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பிகார் மாநிலங்களுக்கு இயக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களின் வேண்டுகோளுக்கிணங்க இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மூலமாக, புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்குத் திரும்பி வருகின்றனா்.
பொது முடக்கத்தால் லட்சக்கணக்கான புலம்பெயா்ந்த தொழிலாளா்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்பை சந்தித்தது. பல்வேறு மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான கிலோமீட்டா் தொலைவில் உள்ள தங்கள் சொந்த ஊருக்குப் பலா் நடந்தே செல்லத் தொடங்கினா். புலம்பெயா்ந்த தொழிலாளா்களுக்காக கடந்த மே 1-ஆம் தேதி முதல் இதுவரை 3,500 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 48 லட்சம் தொழிலாளா்கள் தங்கள் சொந்த ஊரை சென்றடைந்துள்ளனா்.