https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/EY84wzGU8AEUpjE.png

கேரளத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று: பினராயி விஜயன்

by

கேரளத்தில் புதிதாக 40 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் நோய்த் தொற்று பற்றிய சமீபத்திய தகவல்களை வெளியிடுவதற்காக கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (புதன்கிழமை) செய்தியாளர்களைச் சந்தித்தார். 

அப்போது அவர் தெரிவித்ததாவது:

"கேரளத்தில் இன்று புதிதாக 40 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 9 பேர் வெளிநாடுகளிலிருந்தும், 16 பேர் மகாராஷ்டிரத்திலிருந்தும், 5 பேர் தமிழகத்திலிருந்தும் மற்றும் 3 பேர் தில்லியிலிருந்தும் திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 1,004 ஆக உயர்ந்துள்ளது. இதில் 445 பேர் சிகிச்சையில் உள்ளனர். 

நேற்று வரை கேரளத்தைச் சேர்ந்த 173 பேர் பல்வேறு நாடுகளில் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.

வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து மக்கள் கேரளம் திரும்புவதைத் தொடர்ந்து, கரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே, கரோனா தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதலில் கேரளம் அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது."