இந்தியா - சீனா எல்லைப் பிரச்னை: சமரசம் செய்து வைக்கத் தயார் என டிரம்ப் அறிவிப்பு
by DINஇந்தியா - சீனா எல்லைப் பிரச்னையில் இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்து வைக்கத் தயார் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், எல்லைப் பிரச்னை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே சமரசம் செய்து வைக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக டிரம்ப் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி இருநாடுகளிடம் தகவல் தெரிவித்திருப்பதாகவும் அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே, காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா, பாகிஸ்தான் இடையே சமரசம் செய்து வைக்கத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்து வந்தார். ஆனால், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக இருந்தது.