மே 29ல் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை
by DINமே 31 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், நாளை மறுநாள் (மே 29 ஆம் தேதி) அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தவிருக்கிறார்.
தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், வருகிற மே 31 ஆம் தேதியுடன் நான்காம் கட்ட பொது முடக்கம் முடிவடைய உள்ளது.
இதையடுத்து, முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக மே 29 ஆம் தேதி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார். அந்தந்த மாவட்டத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் முதல்வர், ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன் விவாதிப்பார் என்று தெரிகிறது.