https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/nokia.jpg

ஊழியர்களுக்கு கரோனா; ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலை மூடல்

by

ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானதை அடுத்து, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும் 4 ஆம் கட்டமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கரோனா பாதிப்பு இல்லாத பகுதிகளில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, சில தினங்களுக்கு முன்பாக ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலை திறக்கப்பட்டது. 

ஆனால், ஊழியர்கள் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஆலை மீண்டும் மூடப்பட்டது. எத்தனை ஊழியர்கள் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தினை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை.

ஆனால், குறைந்தது 40 பேர் வரையில் பாதிக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் வெளியாகின்றன.  கரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமூக விலகல் மற்றும் உணவகங்கள் உள்பட அனைத்து இடங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.