https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/25/original/Coronavirus_PPE_PTI.jpg

கர்நாடகத்தில் புதிதாக 122 பேருக்கு கரோனா: 108 பேர் மகாராஷ்டிரத்திலிருந்து வந்தவர்கள்

by

கர்நாடகத்தில் புதிதாக கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட 122 பேரில் 108 பேர் மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பியவர்கள் என அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி வெளியான தகவலின்படி:

கர்நாடகத்தில் செவ்வாய்கிழமை மாலை 5 மணி முதல் புதன்கிழமை மதியம் வரை புதிதாக 122 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உள்நாட்டில் பயணம் மேற்கொண்டவர்கள் எண்ணிக்கை 116. புதிதாக பாதிக்கப்பட்ட 122 பேரில் 108 பேர், அதாவது 89 சதவீதத்தினர் மகாராஷ்டிரத்திலிருந்து கர்நாடகம் திரும்பியவர்கள்.

இதைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2,405 ஆக உயர்ந்துள்ளது. இதில், 1,596 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அதேசமயம், கடந்த 19 மணி நேரத்தில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 762 ஆக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பிய 69 வயதுமிக்க பெண்மணி ஒருவர் கடந்த மே 20-ஆம் தேதி பலியான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டார். அவருக்கு தற்போது கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் கரோனா தொற்றால் இதுவரை மொத்தம் 45 பேர் பலியாகியுள்ளனர்.