இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு!

by

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1453 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் மாத்திரம் மொத்தமாக 134 கொவிட்-19 நோயாளிகள் பதிவாகியுள்ளனர். இன்று காலை வரையில் சுமார் 106 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டமை உறுதியாகியுள்ளது.

இதில் 53 பேர் தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் எனவும், ஏனைய 81 பேர் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 732 ஆக உயர்வடைந்துள்ளது.

711 பேர் தொடர்ந்தும் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதுடன், 10 பேர் வைரஸ் தொற்றின் தாக்கத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.