கொரோனா பாதித்த கர்ப்பிணிக்கு ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகள் – மின்முரசு
ஐதராபாத் மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
ஐதாராபாத் காந்தி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்கள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்கு கொரோனா தொற்று இருந்தாலும், மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்து ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்க உதவி புரிந்து வருகிறார்கள்.
கடந்த 8-ந்தேதி கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் கர்ப்பிணி பெண் குழந்தை பெற்றெடுத்தாள். அதன்பின் ஏராளமான பெண்களுக்கு குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில் தெலுங்காவில் இருந்து வந்த பெண்ணுக்கு நேற்று ஆரோக்கியமான இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன. இரண்டும் பெண் குழந்தைகள் ஆகும். ஒரு குழந்தை 2.5 கிலோ எடையும், மற்றொரு குழந்தை 2 கிலோ எடை இருந்ததாகவும் மருத்துவனை தெரிவித்துள்ளது.
மேலும், இரண்டு குழந்தைகளின் மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
சில நாட்களுக்கு முன் மத்திய பிரதேசம் இந்தூரில் ஒரு பெண்ணுக்கு இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தன. கடந்த மாதம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Source: Maalaimalar
murugan
Post navigation
அனுமதிச்சீட்டுக்காக ஆடுகளை விற்ற தொழிலாளி: விமான நிறுவனம் உதவியால் சொந்த ஊர் பறக்கிறார்முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரருக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய குஷ்பு
Related Posts
மூன்று படங்களின் அப்டேட்டை வெளியிட்ட ஜி.வி.பிரகாஷ்
murugan May 28, 2020 0 comment
காவல் துறையினருக்கு பாதுகாப்பு கவசங்களை வழங்கிய விஷால்
murugan May 28, 2020 0 comment