http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__871563136577607.jpg

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.432 குறைந்து ரூ.35,448க்கு விற்பனை!!

சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 432 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. மூன்று நாட்கள் தங்கம் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் இருந்த நிலையில் நேற்று திடீரென்று விலை குறைக்கப்பட்டது. இன்று மீண்டும் விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் .சென்னையில் இன்று (மே 27) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,431 ஆகக் குறைந்துள்ளது. நேற்று இதன் விலை 4,485 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 54 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, நேற்று 35,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 432 ரூபாய் குறைந்து 35,448 ரூபாய்க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.51.40 ஆக இருக்கிறது. நேற்று இதன் விலை ரூ.52.40 ஆக இருந்தது. ஒரு கிலோ வெள்ளி 51,400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.