கொரோனா பரவல் தொடர்பில் எந்த தகவலும் மறைக்கப்படவில்லை: சுகாதார அமைச்சு

by

நாட்டின் கொரோனா பரவல் தொடர்பில் எந்தவொரு தகவலும் மறைக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொரோனா தொடர்பான தகவல்களை குறைத்துக்கூறுதாக தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஏற்கமுடியாதவை என்றும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தப்படும் தகவல்கள் யாவும் துல்லியமானவையாகும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

சுயாதீன நிபுணர்களின் கூட்டணி என்ற அமைப்பு, சமூக ஊடகங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது.

அதில் இலங்கை அரசாங்கம் கொரோனா தொடர்பில் கூறும் தகவல்கள் தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது.

https://img.zoftcdn.com/com/files/2020/01/safe.png

பொது சுகாதார அதிகாரிகள் வெளியிடும் தகவல்களுடன் ஒப்பிடும்போது அரசாங்கத்தின் அதிகாரிகள் வெளியிடும் தகவல்கள் குறைவாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்தக் குற்றச்சாட்டுகளை சுகாதார சேவை பிரதிப்பணிப்பாளர் பிரபா பலிஹாவர்த்தன மறுத்துள்ளார்.

இதேவேளை சிறுவர்கள் மத்தியில் கவசாகி என்ற நோய் பரவல் இலங்கையில் கண்டறியப்படவில்லை என்றும் பபா பலிஹவர்த்தன தெரிவித்துள்ளார்.