7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி, கேகாலை, கண்டி, நுவரெலியா, காலி, களுத்துறை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களுக்கு நாளை காலை 8 மணி வரையில் இந்த அபாய எச்சரிக்கை இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
நிலவும் மழையுடன் கூடிய காலநிலையை அடுத்து இவ்வாறு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை நிலமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.