புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக 3,000 ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை; ராகுல்காந்திக்கு மத்திய அமைச்சர் பதில்
டெல்லி: ஊரடங்கால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாவது தடுக்கப்பட்டுள்ளதாக கூறிய பாஜக மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபடுவதாக குற்றம் சாடியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அசுர வேகத்தில் அதிகரித்து 1,51,767-ஐ எட்டியுள்ளது. பலி எண்ணிக்கையும் 4,337-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அறிவித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஊரடங்கு தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாடியுள்ளார்.
இதற்கு பதிலடி கொடுத்துள்ள மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்; ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்பாக 3 நாட்கள் மட்டுமே ஆனதாகவும், ஆனால் தற்போது 13 நாட்கள் ஆவதாகவும் கூறினார். இதுவே ஊரடங்கின் வெற்றி என்ற அவர்; ஊரடங்கால் பொருளாதாரம் பாதிக்கும் என்று கூறிய காங்கிரஸ் தளர்வுகளை அறிவிக்கும் எதிர்ப்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மத்திய அரசுக்கு எதிரான பிரச்சாரத்தில் ராகுல் காந்தி ஈடுபடுவதற்காக குற்றம் சாடிய ஜவடேகர், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 43 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்ல 3 ஆயிரம் ரயில்கள் இயக்கப்பட்டது வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை என்று கூறினார்.