http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__632763087749482.jpg

வவ்வால் மூலம் கொரோனா வைரஸ் பரவாது: மதுரை காமராஜர் பல்கலை. துணைவேந்தர் திட்டவட்டம்

மதுரை: வவ்வால்கள் மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கான எந்த ஆராய்ச்சி தரவுகளும் இல்லை என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வவ்வால்ல்கள் ஆராய்ச்சியினை முழுமையாக செயல்படுத்தும் மையமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 200-க்கும்  மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி மக்களை கொல்லும் பெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.

இத்தகைய வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தொற்று வவ்வால்கள் மூலம் பரவுவதாக சமூக வலைதளங்களில் உலா வரும் செய்தியை பல்கலைக்கழக துணைவேந்தர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது தொடர்பாக மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் கூறினார். முறையாக சமூக இடைவெளியை பின்பற்றி அடிக்கடி கைக்கழுவுதல் மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தலாம் என்று காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கூறினார்.