இணையத் தொடரில் அறிமுகமாகவுள்ள வடிவேலு
by DINசமீபகாலமாகத் திரைப்படங்களில் அவ்வப்போது காணப்படும் நடிகர் வடிவேலு விரைவில் ஓடிடி தளங்களில் அறிமுகமாகவுள்ளார்.
வடிவேலுடவுன் பல படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் இணையத் தொடரை இயக்கவுள்ளார். அதில் வடிவேலு நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் ஓடிடி தளத்தில் அறிமுகமாகவுள்ளார் வடிவேலு.
கரோனா பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும். அச்சமயத்தில் இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளது. வடிவேலு, இணையத் தொடரில் நடிப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
2017-ல் வெளியான மெர்சல் படத்துக்குப் பிறகு வேறு எந்தத் தமிழ்ப் படத்திலும் வடிவேலு நடிக்கவில்லை. கமல் விரைவில் இயக்கவுள்ள தலைவன் இருக்கின்றான் படத்திலும் வடிவேலு நடிக்கவுள்ளார்.