கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக சிகிச்சை விடுதிகள் அமைத்துக் கொடுத்த வெளிநாட்டவர்
by Dias, Jeyapradheebaகிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் வெளிநாட்டவர் ஒருவரின் நிதிப்பங்களிப்புடன் புதிதாக சிகிச்சை விடுதிகள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சுவிட்சர்லாந்தில் உள்ள வர்த்தகர் S.கதிர்காமநாதனின் 52 மில்லியன் ரூபாய் நிதிப்பங்களிப்புடன் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் புதிதாக அமையப்பெறவுள்ள என்புமுறிவு சத்திர சிகிச்சை விடுதி மற்றும் கண் சத்திர சிகிச்சை விடுதி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் விழா கடந்த வெள்ளிக்கிழமை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் க.ராகுலன் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதில் வர்த்தகர் S.K.கதிர்காமநாதன், மாவட்ட அரசாங்க அதிபர், செயலாளர் சுகாதார அமைச்சு வடமாகாணம், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வடமாகாணம், பணிப்பாளர் போதனா வைத்தியசாலை யாழ்ப்பாணம், வடமாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களினதும் பிராந்திய சுகாதார பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், பொலிஸ் உயர் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதாரப் பணியாளர்கள், மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இவ்விடுதி அமையப்பெறுவதற்கு பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கிய அனைத்து நல்உள்ளங்களுக்கும் எமது வைத்தியசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என வைத்தியசாலை சமூகம் கூறியுள்ளது.