கொரோனா நோயாளிகளுக்காக மேலும் இரண்டு வைத்தியசாலைகள்

by

குவைத் நாட்டில் இருந்து இதுவரை இலங்கை வந்துள்ள அனைவருக்கும் PCR பரிசோதனைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

தெல்தெனிய வைத்தியசாலை மற்றும் ஹம்பாந்தோட்டை பழைய வைத்தியசாலை ஆகியவற்றை கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

அதேவேளை வெலிசரை கடற்படை முகாமில் கடமையாற்றிய 3 ஆயிரம் படையினர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர்.

கடற்படையினர் இடையில் கொரோனா வைரஸ் பரவுவது தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.