மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள வரி அவர்களுக்கு செய்யும் அநீதி: ஐ.ம.சக்தி

by

கொரோனா வைரஸ் பரவல் நிலைமை காரணமாக தமது வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள் மீது அரசாங்கம் பெரிய வரிச்சுமையை சுமத்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி கட்சி தெரிவித்துள்ளது.

இது மக்களுக்கு செய்யும் அநீதி எனவும் அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாட்டில் பரவ ஆரம்பித்த போது அரசாங்கம் மைசூர் பருப்பு மற்றும் டின் மீன்களின் விலைகளை குறைத்தது.

இதுவும் தேர்தலை இலக்கு வைத்து வழங்கிய நிவாரணம். எனினும் தற்போது பருப்பு மற்றும் டின் மீனின் விலை முன்பிருந்ததை விட அதிகரித்துள்ளது.

இதனால், அரசாங்கம் உடனடியாக அத்தியவசிய பொருட்களுக்கு விதித்துள்ள அதிகளவான வரிகளை நீக்கி மக்களுக்கு நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கோரிக்கை விடுத்துள்ளது.