ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்
வௌ்ளை வேன் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பிணை மனு தொடர்பான தீர்மானம் அன்றைய தினமே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.