உலகில் நேற்று அதிக வெப்பநிலை பதிவான இடம் ராஜஸ்தானின் சுரு நகரம்!! :122 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது!!
ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தின் சுரு நகரத்தில் உலகிலேயே நேற்று அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இங்கு நேற்று 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் (50 டிகிரி செல்சியஸ்) பதிவானது. நாடு முழுவதும் கோடைவெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. வட இந்திய மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கையும் விடுத்திருந்தது. R
இந்த நிலையில் உலகிலேயே நேற்று மிக அதிகமான வெப்பநிலை பதிவான இடங்களில் ஒன்றாக ராஜஸ்தான் சுருவும் இடம்பெற்றுள்ளது. சுரு நகரில் நேற்று 122 டிகிரி ஃபாரன்ஹீட் (50 டிகிரி செல்சியஸ்) வெப்பம் பதிவாகி இருந்தது. சுருநகரைப் போலவே உலகில் நேற்று அதிகமான வெப்பநிலை பதிவான இன்னொரு நகரம் ஜகோபாபாத். இது பாகிஸ்தானில் உள்ளது. ஐகோபாத்திலும் நேற்று 122 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி ரவீந்திர சிகாக் கூறும்பொழுது, ''நாட்டின் அதிக வெப்பநிலை நேற்று ராஜஸ்தானின் சுரு நகரில் பதிவாகி உள்ளது. 50 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பதிவான இந்த வெப்பநிலை, பாகிஸ்தான் நாட்டின் ஜகோபாபாத் நகரிலும் பதிவாகி உள்ளது. இதனால் நேற்றைய நாளில் உலகின் மிக அதிக வெப்பநிலை கொண்ட பகுதிகளாக சுரு மற்றும் ஜகோபாபாத் நகரங்கள் இருந்தன'' எனத் தெரிவித்து உள்ளார்.