https://images.dinamani.com/uploads/user/imagelibrary/2020/5/27/original/Corona_Test_1231.jpg

அசாம் மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் 

by

புதன்கிழமை காலை 10 மணி நிலவரப்படி கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர் விவரத்தை அசாம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

அசாம்

அசாமில் மேலும் நால்வருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். 

சுகாதார அமைச்சரின் கூற்றுப்படி,

அசாமில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 686-ஐ எட்டியுள்ளது, இதில் 617 தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 62 பேர் நோயிலிருந்து மீண்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த நோயால் இதுவரை நான்கு இறப்புகள் பதிவாகியுள்ளன.

உத்தரகண்ட் 

உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் 30 பேருக்கு கரோனா பதிவாகியுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

புதிதாக பாதிக்கப்பட்ட 30 பேரை அடுத்து அந்த மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 431 ஆக அதிகரித்துள்ளது. இதில் 58-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூற்றுப்படி, இந்தியாவில் மொத்தம்  1,51,767 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 83,004 பேர் சிகிச்சையில் உள்ளனர். 64,425 பேர் நோயிலிருந்து குணமடைந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் 4,337 பேர் பலியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.