2021 டி20 உலககோப்பை தொடர் வேறு நாட்டில் நடத்தப்படும்: பிசிசிஐ-யை மிரட்டும் ஐசிசி – மின்முரசு
இந்திய அரசிடம் வரி விலக்கு அனுமதி வாங்காவிடில் 2021 உலக கோப்பையை இந்தியாவில் இருந்து வேறு நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி மிரட்டல் விடுத்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் அக்டோபர் – நவம்பர் மாதங்களில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்றால் போட்டி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்தது.
அதன்பின் அடுத்த ஆண்டு இந்தியாவில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஐசிசி மேற்கொள்ளும். டிக்கெட் விற்பனை, டிவி ஒளிபரப்பு உரிமம், ஸ்பான்சர்ஸ் போன்றவைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு குறிப்பிடத்தொகையை ஒவ்வொரு கிரிக்கெட் போர்டுக்கும் பகிர்ந்து அளிக்கும்.
பொதுவாக ஒரு நாடு போட்டியை நடத்த விருப்பம் தெரிவித்தால், அந்த நாட்டின் கிரிக்கெட் போர்டு அரசிடம் பல்வேறு வரி விலக்கு சலுகைகளை பெறும். இதனால் வரியாக செலுத்தக்கூடிய கோடிக்கணக்கான பணம் ஐசிசி-க்கு மிச்சமாகும்.
இந்த முறை இந்திய அரசு வரி விலக்குக்கு அனுமதி கொடுக்கவில்லை. இதனால் வரி விலக்குக்கு அனுமதி வாங்கி தந்தால் மட்டுமே போட்டியை இந்தியாவில் நடத்த நடவடிக்க எடுப்போம். இல்லை என்றால் வேறு நாட்டிற்கும மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று பிசிசிஐ-க்கு ஐசிசி எச்சரிக்கை விடுத்திருந்தது.
2018-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த கூட்டத்தின்போது 2019 டிசம்பர் மாதம் வரை ஐசிசி அவகாசம் அளித்திருந்தது. அதன்பின் ஏப்ரல் 17-ந்தேதி வரை அவகாசத்தை நீட்டித்துள்ளது.
இந்நிலையில் தற்போது பொது முடக்கம் அமலில் இருப்பதால் பிசிசிஐ மேலும் அவகாசம் கேட்கிறது. ஒருவேளை இந்த முறையில் அனுமதி வாங்க தவறினால் 2021 டி20 உலக கோப்பை தொடர் வேறு நாட்டில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிசி திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
பிசிசிஐ ஜூன் 20 அல்லது ஜூன் 30-ந்தேதி வரை அவசாகம் கேட்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related Tags :
Source: Maalaimalar
Ilayaraja
Post navigation
படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்ட தேவாலய செட் அடித்து நொறுக்கப்பட்டதால் பரபரப்புஇந்திய வீரர்கள் எனக்கு எதிராக பேச கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்: அப்ரிடி குற்றச்சாட்டு
Related Posts
லாக்டவுனில் தமிழ் கற்கும் சூர்யா பட நடிகை
murugan May 28, 2020 0 comment
பிளஸ்-2 மாணவர்களுக்கு கூடுதலான மதிப்பெண்கள் வழங்கும் தேர்வுத்துறை
murugan May 28, 2020 0 comment