வவுனியா நீதிமன்றத்திற்கு முன்பாக விபத்து: ஒருவர் காயம்

by

வவுனியா நீதிமன்றிற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா பழையபேருந்து நிலைய பகுதியிலிருந்து வைத்தியசாலை பக்கமாக பயணித்து கொண்டிருந்த கனரக வாகனத்துடன், பின்னால் வந்து‌ கொண்டிருந்த முச்சக்கரவண்டி மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் முச்சக்கரவண்டி கடுமையான சேதமடைந்ததுடன், அதன் சாரதி காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையின் விபத்து பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளினை வவுனியா போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/05/acc_vav__1_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/05/acc_vav__2_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/05/acc_vav__3_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/05/acc_vav__4_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg