இந்திய பிரஜைகள் மூவருக்கு அத்தியாவசிய தேவைகருதி நிதியுதவி
by Yathu, Benatகொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சொந்த நாட்டுக்கு திரும்ப முடியாத நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தங்கியுள்ள இந்திய பிரஜைகள் மூவருக்கு அத்தியாவசிய தேவைகருதி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்திலிருந்து இலங்கைக்கு தொழில் நிமிர்த்தம் வருகை தந்து கிளிநொச்சி மாவட்டத்தில் தமது தொழில் நடவடிக்கையில் இவர்கள் ஈடுபட்டு வந்தனர்.கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டதனால் வருமானம் இன்றி பாதிப்பினை எதிர்நோக்கியிருந்த நிலையில் அவர்களுக்கான உடனடி உதவிகள் கரைச்சி பிரதேச செயலகத்தின் ஊடாக வழங்கப்பட்டு வந்தன.
இந்த நிலையில் இவர்கள் மூன்று பேரதும் வாழ்வாதார தேவையினை ஈடுசெய்யும் வகையில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் இன்றையதினம் நிதியுதவியினை மாவட்டச்செயலகத்தில் வைத்து வழங்கியிருந்தார்.
மீளவும் தங்களது நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு உள்ளதாகவும் அதற்கான வழிவகையினை ஏற்படுத்தி தருமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.