ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில்
by Steephen, Benatமுன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய பின்னர் அவரை எதிர்வரும் ஜூன் மாதம் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய வெள்ளை வான் ஊடக சந்திப்பை நடத்திய சம்பவம் தொடர்பாக ராஜித சேனாரத்ன கடந்த 13 ஆம் திகதி குற்றவியல் விசாரணை திணைக்களத்தில் ஆஜராகிய நிலையில் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.