http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__332866847515107.jpg

வெட்டுக்கிளிகள் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு: தமிழக வேளாண்துறை

சென்னை: வெட்டுக்கிளி படையடைப்பு தக்காண பீட பூமியை தாண்டி தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் ராஜஸ்தான், உ.பி.யை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு பற்றி வேளாண்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட்டால் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் வேளாண்துறை அறிவிறுத்தல் செய்துள்ளது.