160 தொழிலாளர்கள் தென் கொரியா புறப்பட்டுச் சென்றனர்

by

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்வது தற்காலிமாக இடைநிறுத்தப்பட்டிருந்ததுடன் நேற்று இரவு மீண்டும் இலங்கையில் இருந்து 160 தொழிலாளர்கள் தென் கொரியாவின் சியோல் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளனர்.

மத்தளை மகிந்த ராஜபக்ச சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மியன்மார் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். மத்தள விமான நிலையத்தில் இருந்து தென் கொரியாவின் சியோல் நகருக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள முதல் விமான பயணம் இதுவாகும்.

தென் கொரியாவில் தொழில் புரிந்து வந்த நிலையில் விடுமுறைக்காக கடந்த மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் இலங்கை வந்திருந்தவர்களே இவ்வாறு அங்கு திரும்பிச் சென்றுள்ளனர்.

எவ்வாறாயினும் தென் கொரியாவுக்கு சென்ற பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சான்றிதழ்களை பெறும் தொழிலாளர்கள் மாத்திரமே அந்நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.