மன்னார் மாவட்டத்தின் வழமையான செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்

by

கொரோனா தாக்கம் காரணமாக நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நேற்று காலை முதல் தளர்த்திக் கொள்ளப்பட்டுள்ள நிலையில் மன்னார் மாவட்டத்தில் மக்கள் தமது நாளாந்த செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்றையதினத்தில் மன்னார் மாவட்டத்தில் உள்ள அரச தற்றும் தனியார் அலுவலகத்தின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மன்னாரில் இருந்து கொழும்பு மற்றும் கம்பகா ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கான அரச,தனியார் போக்குவரத்து சேவைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார்.

மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் விசேட கண்காணிப்பு மாற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

முகக்கவசம் அணியாமல் நடமாடுபவர்கள் எச்சரிக்கப்படவதோடு, முச்சக்கர வண்டிகளில் அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி பயணிப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/05/mannar_news__1_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/05/mannar_news__2_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/05/mannar_news__6_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg
https://dimg.zoftcdn.com/s1/photos/news/full/2020/05/mannar_news__7_/img/625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg