அத்தியாவசிய பொருட்களின் விலைகள் பாரியளவு அதிகரிக்கும் என அறிவிப்பு

by

நாட்டிற்கு தேவையான அளவு அத்தியாவசிய பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக நாட்டில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. எனினும் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாவிட்டாலும் பொருட்களின் விலை அதிகரிக்கும் என அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாட்டில் அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கம் முன்னர் அறிவித்தது.

அதற்கமைய முதலில் காணப்பட்ட விலை மற்றும் நாணய மாற்று வீதங்களுக்கமைய உணவு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இதனால் பொருட்கள் விலை அதிகரிக்க கூடும். சீனி ஒரு கிலோ 18 ரூபாயிலும், டின் மீன் ஒன்று 50 ரூபாயிலும் பருப்பு மற்றும் கடலை உட்பட பல பொருட்களின் விலை அதிகரிக்ககூடும் என அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜீ.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.