நாடு முழுவதும் கடுமையாக்கப்படும் சட்டம்! பொலிஸார் தீவிர நடவடிக்கை

by

நாட்டில் சமூக இடைவெளியை கருத்திற்கொள்ளாமல் செயற்படும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று மேற்கொள்ளப்பட்ட கண்கானிப்பிற்கமைய இன்றைய தினம் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் சமூக இடைவெளியை மீறிய 357 பேர் கொழும்பு மற்றும் கம்பஹா உட்பட நாடு முழுவதும் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நபர்களின் சமூக இடைவெளியை கருத்திற்கொள்ளாமல் செயற்படுபவர்களுக்கு கமராவுடன் சிவில் ஆடையில் செயற்படும் அதிகாரிகள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தினாலும் மக்களின் பாதுகாப்பினை கருதியே சுகாதார ஆலோசனைகளை கடைபிடிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.