சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி

by

தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான குழு இலங்கை அரசாங்கத்துக்கு தமது அதிருப்தியை தெரியப்படுத்தியுள்ளது.

உயிர்;த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் சட்டத்தரணி ஹிஸ்புல்லாஹ் கடந்த ஏப்ரல் 20ஆம் திகதியன்று கைதுசெய்யப்பட்டார்.

எனினும் அவரை சட்டத்தரணிகள் சந்திப்பதற்கு வாய்ப்புக்கள் மறுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சட்டத்தரணியின் கைது மற்றும் தடுத்துவைப்பு என்ற விடயத்தில் மனித உரிமை விடயங்கள் கவனத்தில் கொள்ளப்படவேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியுள்ளது.

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று கோரிக்கையையும் ஒன்றியம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

ஏற்கனவே சர்வதேச அறங்கூறுநர் சம்மேளனமும் இந்த கைது தொடர்பில் தமது கவன ஈர்ப்பை வெளியிட்டமையையும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.