மும்பை தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1639 ஆக அதிகரிப்பு
மும்பை தாராவி குடிசைப்பகுதியில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளது.
மும்பை:
இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
தற்போதைய நிலவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 57 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
உலகின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், மும்பை தாராவி குடிசைப்பகுதியில் மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 1,639 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Coronavirus | Dharavi | கொரோனா வைரஸ் | தாராவி
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1.51 லட்சத்தை தாண்டியது- 4337 பேர் மரணம்
மே 27, 2020 09:05
கொரோனா அப்டேட் - உலக அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.75 லட்சத்தை கடந்தது
மே 27, 2020 06:05
கொரோனாவுக்கு பிரேசிலில் ஒரே நாளில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
மே 27, 2020 05:05
இந்தியாவில் கொரோனா தொற்று மீட்பு விகிதம் 41.61 சதவீதமாக அதிகரிப்பு
மே 27, 2020 05:05
சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரத்தை தாண்டியது
மே 27, 2020 03:05