அதிரும் அமெரிக்கா - கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
நியூயார்க்:
உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி 56 லட்சத்து 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 28 லட்சத்து 84 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா பரவியவர்களில் 24 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 49 ஆயிரத்து 900க்கு மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் கடந்த சில மாதங்களாக அமெரிக்காவை புரட்டி எடுத்து வந்தது. வைரஸ் பரவியவர்கள், பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் வைரஸ் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 17 லட்சத்து 13 ஆயிரத்தைக் கடந்துள்ளது. மேலும் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்து 69 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
Related Tags :
கொரோனா வைரஸ் பற்றிய செய்திகள் இதுவரை...
சவுதி அரேபியாவில் கொரோனா பாதிப்பு 76 ஆயிரத்தை தாண்டியது
மே 27, 2020 03:05
தாராவியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1621 ஆக உயர்வு
மே 27, 2020 01:05
கொரோனா அப்டேட் - உலக அளவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்தது
மே 27, 2020 01:05
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 55 ஆயிரத்தை நெருங்குகிறது
மே 26, 2020 23:05
மகாராஷ்டிராவில் 50 ஆயிரத்தை கடந்தது- மாநில வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம்
மே 26, 2020 11:05