காசி வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்
பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலைச் சேர்ந்தவர் காசி. திருமணம் ஆகாத இவர், ஏராளமான பெண்களிடம் பழகி அவர்களுடன் பாலியல் ரீதியாக நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு பின்னர் அவர்களை மிரட்டி பணம் பறித்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை டாக்டர், நாகர்கோவிலில் உள்ள பெண் என்ஜினீயர், கன்னியாகுமரி சிறுமி உள்ளிட்டவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காசியை கைது செய்து சிறையில் அடைத்தனர். காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கிடையே 2 முறை காவலில் எடுக்கப்பட்டு காசியிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில் காசி மீது வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற மாதர் சங்கம் மற்றும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் காசி வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற எஸ்.பி. ஸ்ரீநாத் பரிந்துரை செய்த நிலையில் டிஜிபி திரிபாதி ஆணை பிறப்பித்துள்ளார்.