https://img.maalaimalar.com/Articles/2020/May/202005271917572971_Tamil_News_Alcohol-shops-will-be-open-tomorrow-in-Kerala_SECVPF.gif

கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடக்கம்

கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்:

கொரோனா ஊரடங்கைத் தொடர்ந்து கேரள மாநிலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கின்றன. இதனால் மது பிரியர்கள் தவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் கேரளாவில் நாளை முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் நாளை காலை 9 மணி முதல் மதுபானங்கள் விற்பனை தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஒரு முறை மதுபானம் வாங்கினால் 5 நாட்களுக்கு பிறகே மறுபதிவு செய்ய முடியும் என்றும் VQM என்ற செயலியில் பதிவு செய்து இ-டோக்கன் பெற்றவர்களுக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பொது முடக்கத்தால் கேரளாவில் 67 நாட்களுக்கு பின் மதுபான விற்பனை நிலையங்கள் திறக்கப்படுகின்றன.

Related Tags :

Pinarayi Vijayan | பினராயி விஜயன்