http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__738079249858857.jpg

தங்கம் சவரனுக்கு 472 சரிந்தது

சென்னை: தங்கம் விலை நேற்று அதிரடியாக சவரனுக்கு 472 சரிந்தது.  ஆபரண தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு துவக்கத்தில் இருந்தே தங்கம் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது. கடந்த ஜனவரி துவக்கத்தில் தங்கம் சவரன் 30,000ஐ தாண்டியது. ஜனவரி இறுதியில் 31,000ஐ தாண்டியது. பிப்ரவரி மாதத்திலும் இந்த விலை உயர்வு தொடர்ந்தது. அதிகபட்சமாக பிப்ரவரி 24ம் தேதி சவரன் 752, கடந்த மார்ச் 4ம் தேதி சவரனுக்கு 824 என அதிரடியாக தங்கம் விலை உயர்ந்தது.  ஊரடங்கிற்கு முன்பு கடைசியாக சென்னையில் ஆபரண தங்கம் சவரன் 31,616 ஆக இருந்தது. ஊரடங்கில் நகைக்கடைகள் மூடப்பட்டன.

ஆனால், ஊரடங்கு காலத்தில் தங்கம் சவரனுக்கு 4,048 உயர்ந்தது. இந்நிலையில், கடந்த 11ம் தேதி முதல் சென்னையில் தங்கம் விலை மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.13ம் தேதி வரை விலை சற்று குறைந்தது. ஆனால், 14ம் தேதி சென்னையில் ஆபரண தங்கம் சவரனுக்கு 176 உயர்ந்து 35,720க்கு விற்கப்பட்டது.  பின்னர் தொடர்ச்சியாக, சவரனுக்கு 15ம் தேதி 288, 16ம் தேதி 360, 18ம் தேதி 256 அதிகரித்தது. அதாவது மொத்தம் 1,080 உயர்ந்தது. பின்னர் 19ம் தேதி 752 சரிந்தது. பின்னர் தொடர்ந்து ஏற்ற இறக்கம் இருந்தது.  கடந்த 25ம் தேதி, விலையில் மாற்றமின்றி கிராம் 4,544க்கும் சவரன் 36,352க்கும் விற்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு 472 சரிந்து, கிராம் 4,485க்கும் சவரன் 35,880க்கும் விற்பனையானது.