http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__350460231304169.jpg

17,728 ஆக கொரோனா உயர்வு: தமிழகத்தில் மேலும்646 பேருக்கு பாதிப்பு

* ஒரே நாளில்   9 பேர் பலி
* 611 பேர்     குணமடைந்தனர்
* ஒரே நாளில் 22 குழந்தைகளுக்கு கொரோனா
* கொரோனா தொற்று ஏற்பட்ட 646 பேரில் 22 பேர் குழந்தைகள் என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, செங்கல்பட்டு 2, சென்னை 15, கடலூர், திண்டுக்கல் , காஞ்சிபுரம், மதுரை, திருவண்ணாமலை தலா 1 என மொத்தம் 22 குழந்தைகள் நேற்று மட்டும் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னை:  தமிழகத்தில் இன்று மேலும் 646 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், கொரோனா பாதிப்பு 17,728 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 9 பேர் பலியான நிலையில், 611 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.   இதுகுறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தில் நேற்று, 10 ஆயிரத்து 289 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னை 509, செங்கல்பட்டு 22, கடலூர் 4, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மதுரை தலா 2, கன்னியாகுமரி, ராணிபேட்டை, திருப்பத்தூர், தூத்துக்குடி தலா 1, காஞ்சிபுரம் 13, திருவள்ளூர் 25, திருவண்ணாமலை 6, விழுப்புரம் 3 என 592 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதை தவிர்த்து தமிழகத்துக்கு வந்தவர்களில் மகாராஷ்டிரா 35, கேரளா 1, குஜராத் 6, டெல்லி, உத்தரபிரதேசம் தலா 2, துபாய் 5 என 54 பேர் பாதிக்கபட்டுள்ளனர். இதனால் நேற்று மட்டும் தமிழகத்தில் கொரோனாவால் 646 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.   அதன்படி தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த, 611 பேர் குணமடைந்தனர். அதன்படி குணமடைந்தோரின் எண்ணிக்கை 9342 ஆக உயர்ந்துள்ளது.

 இதனை தவிர்த்து தற்போது சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 256. இதேபோல் செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது ஆண், ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 57 வயது ஆண், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45 வயது பெண், 55 வயது பெண், 70 வயது பெண், 75 வயது ஆண் ஆகியோரும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண், 65 வயது ஆண், 76 வயது ஆண் என 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

 இதனால் தமிழகத்தில் இதுவரை பலியானோரின் எண்ணிக்கை 127 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 386 பேர் ஆண்கள்,  260 பேர் பெண்கள். இதுவரை 11,217 ஆண்களும், 6 ஆயிரத்து 506 பெண்களும், 5 திருநங்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.