http://img.dinakaran.com/data1/DNewsimages/Tamil_News_2005_2020__796123683452607.jpg

பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1, 2 அணைகளிலிருந்து ஜூன் 8ம் தேதி முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

சென்னை: வரும் ஜூன்8 ம் தேதி முதல் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2  அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளதாக, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.   இதுகுறித்து தமிழக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டம், கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்புகளில் உள்ள  பாசனத்துக்கு பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார்-1,2 அணைகளிலிருந்து   தண்ணீர்  திறந்து விடுமாறு மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.  

இதையடுத்து பாசனத்திற்கு 8.6.2020  முதல் 28.2.2021 வரை நாள் ஒன்றுக்கு 850 கன அடி/விநாடிக்கு,  பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சித்தார் 1 மற்றும் 2 அணைகளிலிருந்து தண்ணீரை திறந்துவிட ஆணையிட்டுள்ளேன். இதனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் கோதையாறு மற்றும்  பட்டணங்கால்  பாசனப் பகுதிகளின் 79,000 ஏக்கர்  நிலங்கள் பாசன வசதி  பெறும்.