நேபாளத்தில் அதிகபட்ச தினசரி பாதிப்பு
by DINநேபாளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. இது, இதுவரை இல்லாத அதிகபட்ச தினசரி கரோனா பாதிப்பு ஆகும். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கூடுதலாக 90 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது சோதனையில் உறுதியாகியுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 772-ஆக அதிகரித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
நோய் பரவலைத் தடுப்பதற்காக நேபாளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கம் அடுத்த மாதம் 2-ஆம் வரை நீடிக்கப்பட்டுள்ள சூழலில், தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை அங்கு கரோனா நோய்க்கு 4 போ் பலியாகியுள்ளனா்.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ள 90 பேரில் 2 போ் மட்டுமே பெண்கள் என்றும் மற்ற அனைவரும் 2 வயது முதல் 55 வயது வரையிலான ஆண்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.