https://img.dailythanthi.com/Articles/2020/May/202005271955121379_Who-is-the-heir-to-Jayalalithaas-property-J-Deepa_SECVPF.gif

ஜெயலலிதாவின் சொத்துக்கு வாரிசு யார்? ஜெ. தீபா பேட்டி

ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு நீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது என ஜெ.தீபா கூறியுள்ளார்.

சென்னை,

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அண்ணன் மகனும், அண்ணன் மகளும் இரண்டாம் நிலை வாரிசு என்று திட்டவட்டமாக உயர்நீதிமன்றம் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற மத்திய அரசு மறு பரிசீலனை செய்ய சொல்லி உள்ளது என நிருபர் கேள்வி எழுப்பினார் அதற்கு பதில் அளித்த தீபா, மெமொரியல் உருவாக்குவதால் மக்களுக்கு என்ன பயன் என்பதை நீதிபதிகள் பட்டியிலிட்டுள்ளனர்.

இறுதியாக சொல்லக்கூடியது என்னவென்றால் இதற்கும் மேலாக இப்படி ஒரு அநியாயமாக செயலை செய்ய வேண்டுமா? என கேள்வி எழுப்பினார். அதனை தொடர்ந்து அவர் கூறுகையில்,

சென்னை உயர்நீதிமன்றம் அளித்திருப்பது, வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. ஜெயலலிதா சொத்து தொடர்பான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு நாங்களே வாரிசு என்பது உறுதியாக உள்ளது. தீர்ப்பும் அவசர சட்டமும் முரணாக உள்ளது. அவரச சட்டம் செல்லாது.

 மேல்முறையீடு செல்ல நானும் தீபக்கும் முடிவு செய்துள்ளோம். சட்டப்பூர்வ நடவடிக்கைகளை முதலில் மேற்கொள்வோம். அதன்பிறகே போயஸ் தோட்டம் செல்வோம்.

எனக்கும் தம்பிக்கும் 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு தர நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. நாங்கள் தான் சட்டப்பூர்வ வாரிசு என நீதிமன்றமே அறிவித்துள்ளது. ஜெயலலிதாவின் சொத்துக்கள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.