https://img.dailythanthi.com/Articles/2020/May/202005271728477008_Thunder-showers-to-9-districts_SECVPF.gif

9 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

9 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல் மற்றும் தேனி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

மதுரை, திருச்சி, கரூர், தருமபுரி, சேலம் வேலூர் திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகக்கூடும். அடுத்த 24 மணி நேரத்திற்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் முற்பகல் 11.30 மணி முதல் 03.30 மணி வரை திறந்தவெளியில் வேலை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வட மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வரை வீசக்கூடும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வரை வீசக்கூடும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மன்னார் வளைகுடா பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 31-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தென்மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வரை வீசக்கூடும் அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதால் வரும் 31-ம் தேதி முதல் ஜூன் 4-ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடலின் ஆழ்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தென் மேற்கு அரபிக்கடல் பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40-50 கி.மீ வரை வீசக்கூடும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வடக்கு மற்றும் வட மேற்கு அரப்பிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45-55 கி.மீ. வரை வீசக்கூடும். அடுத்த 4 நாட்களுக்கு மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ்ஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ்ஸையும் ஒட்டி இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.