https://img.dailythanthi.com/Articles/2020/May/202005271621090938_Lifetime-bans-for-abusive-examiners-Teacher-Selection-Board_SECVPF.gif

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு விவகாரம்: முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதிப்பு

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 199 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

அரசு பாலிடெக்னிக்குகளில் காலியாக உள்ள 1058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டி எழுத்து தேர்வு 2017ல் நடந்தது.

இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகள் நடந்ததாக புகார்கள் எழுந்த நிலையில் தேர்வு வாரிய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் 199 பேர் முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து தொடர் விசாரணை நடத்திய ஆசிரியர் தேர்வு வாரியம், 199 தேர்வர்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் போட்டிகளில் பங்கேற்காதவாறு  வாழ்நாள் முழுவதும்  தடை விதித்து உத்தரவிட்டது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.