https://img.dailythanthi.com/Articles/2020/May/202005272138097588_Nepal-Foreign-Minister-Gyawali-confident-new-map-will-pass_SECVPF.gif

நேபாள நாட்டின் புதிய வரைப்படம் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் - நேபாள வெளியுறவு மந்திரி

நேபாள நாட்டின் புதிய வரைப்படம் மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் நேபாள வெளியுறவு மந்திரி பிரதீப் குமார் கியாவாலி தெரிவித்துள்ளார்.

பூடான்,

நேபாள அரசாங்கம் மே 20 -ம் தேதி  அந்நாட்டின் புதிய, சர்ச்சைக்குரிய வரைபடத்தை வெளியிட்டது, இது இந்திய பிராந்தியங்களான லிபுலேக், கலாபானி, லிம்பியாதுரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த வரைபடத்தை நில மேலாண்மை, கூட்டுறவு மற்றும் வறுமை ஒழிப்பு அமைச்சகம் வெளியிட்டது.

இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றிய நேபாள பிரதமர் கே.பி. ஒளி நாட்டின் புதிய வரைபடங்கள் வெளியிடப்படும், அது தனது சொந்தமாகக் கருதும் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கி இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்தியப் பகுதிகளை உள்ளடக்கிய நேபாள நாட்டின் புதிய வரைபடத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. முன்னதாக இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்த நிலையில், நாடாளுமன்றம் இந்த வரைபடம் மற்றும் அதுதொடர்பான மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கவில்லை என ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது.

இதனிடையே இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்று நம்புவதாக நேபாள வெளியுறவு மந்திரி பிரதீப் குமார் கியாவாலி தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

புதிதாக வெளியிடப்பட்ட வரைபடத்திற்காக அரசாங்கம் முன்மொழியப்பட்ட திருத்த மசோதாவுக்கு ஒருமித்த கருத்து உள்ளது. இது விரைவில் ஒருமனதாக விவாதிக்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என்றும், நாளை பட்ஜெட். எனவே, அநேகமாக 20-ம் தேதி திருத்த மசோதா வர வாய்ப்புள்ளது. இல்லையென்றால், மிக விரைவில் நேபாளத்தின் அனைத்து தரப்பினரின் ஆதரவோடு ஏற்றுக்கொள்ளப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்தியாவும் நேபாளமும்1800 கிலோ மீட்டர் எல்லையைப் பகிர்ந்து வருகின்றனர். 1816 இல் ஆங்கிலேய காலனியாதிக்க ஆட்சியாளர்களுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை வைத்து லிபுலேக் கணவாயை தங்களது பகுதி என்று நேபாளம் அண்மைக்காலமாகக் கோரி வருகிறது. அதே போல் சீனாவுடன் ஏற்பட்ட 1962 போருக்குப் பிறகே இந்தியா தனது துருப்புகளை நிறுத்தியுள்ள லிம்பியாதுரா, காலாபானி பகுதியையும் நேபாளம் உரிமை கோரி வருவது குறிப்பிடத்தக்கது.