https://img.dailythanthi.com/Articles/2020/May/202005270647218687_Germany-has-extended-social-distancing-measures-until-June_SECVPF.gif

கொரோனா எதிரொலி; ஜெர்மனியில் வரும் ஜூன் 29ந்தேதி வரை சமூக இடைவெளி விதிகள் நீட்டிப்பு

ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வர, வரும் ஜூன் 29ந்தேதி வரை சமூக இடைவெளி விதிகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.

பெர்லின்,உலக நாடுகளை புரட்டி போட்டுள்ள கொரோனா பாதிப்புகள் ஜெர்மனியிலும் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகின்றன.  அந்நாட்டில் இதுவரை 1 லட்சத்து 80 ஆயிரம் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.  8 ஆயிரத்து 400 பேர் உயிர்க்கொல்லி வைரசுக்கு பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில், ஜெர்மனியில் கொரோனா பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கையாக, வரும் ஜூன் 29ந்தேதி வரை சமூக இடைவெளி விதிகள் நீட்டிக்கப்பட்டு உள்ளன.இது பற்றி ஜெர்மனியின் மத்திய மற்றும் மாநில அரசுகள் கூட்டு முடிவு ஒன்றுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளன.கொரோனா வைரசுடனான தொடர்புகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.