https://img.dailythanthi.com/Articles/2020/May/202005272203492179_Indias-Covid19-recovery-rate-pegged-at-42-over-64k-cured_SECVPF.gif

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதம் - மத்திய அரசு

இந்தியாவில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து குணமடைவோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளதாக மத்திய சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்ட தகவலின்படி:

இந்தியாவில் மொத்தம் 1,51,767 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் 64,426 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 42.4 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் இறப்பு விகிதம் 2.86 சதவீதமாக உள்ளது. அதுவே உலகளவில் 6.36 சதவீதமாக உள்ளது.

நாட்டில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் 624 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. அரசு ஆய்வகங்கள் 435, தனியார் ஆய்வகங்கள் 189. செவ்வாய்கிழமை மட்டும் 1,16,041 லட்சம் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 32,42,160 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.