https://img.dailythanthi.com/Articles/2020/May/202005271802476059_We-should-never-let-differences-overshadow-our-relations-We_SECVPF.gif

இந்தியா - சீனா இடையே போர் மேகம்: இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் விளக்கம்

இந்தியா - சீனா இடையே போர் மேகம் சூழ்ந்த நிலையில் இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் விளக்கம் அளித்துள்ளார்.

பிஜூங்,

லடாக் எல்லையில் சீனா தனது ராணுவப் படைகளைக் குவித்துள்ளது. இதற்குப் பதிலடி தரும் வகையில் இந்திய ராணுவமும் லடாக் எல்லையில் படைகளைக் குவித்துள்ளது. இதனால், எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த நிலையில், எல்லைப் பிரச்னை தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே மத்தியஸ்தம் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளதாக டிரம்ப் தனது தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சீன தூதர் சன் வெய்டாங் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

கொரோனா வைரசை எதிர்த்து போராட வேண்டியது தான் இரு நாடுகளின் முக்கிய நோக்கம். இரு தரப்பு பேதங்களை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும். இந்தியா - சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம்.

இந்தியா - சீனா இடையிலான உறவினை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரு நாடுகளிக்கிடையே எந்த அச்சுறுத்தலும் இல்லை.
கருத்து வேறுபாடுகள் நம் உறவுகளை மறைக்கின்றன. நாம் ஒருபோதும் அதனை விட்டு விடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.